குளச்சலில் பாரம்பரிய "கரை மடி வலை" மீன்பிடி தொழிலில் ஈடுபடும் வயதான மீனவர்கள்
பாரம்பரிய மீன்பிடி முறையான கரை மடி வலை மீன்பிடி தொழிலில் ஈடுபடும் வயதான மீனவர்களுக்கு அரசு உதவி செய்து, அத்தொழில் மேம்பட ஊக்கமளிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நவீன விசைப்படகுகளில் சுமார் ஐந்து முதல் பத்து நாள்கள் வரை நடுக்கடலில் மீனவர்கள் தங்கி பிடித்து வரப்படும் மீன்கள் ஐஸில் வைத்து பதப்படுத்தப்பட்டு கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும். , இந்நிலையில் பாரம்பரிய கரை மடி வலை மூலம் பிடிக்கப்படும் புத்தம் புதிய மீன்களை வாங்க பொதுமக்கள் உள்ளூர் வியாரிகளும் ஆர்வம் காட்டுகின்றனர்.
மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மீன்களை வாங்கி சென்றாலும், ஐம்பதிற்கும் மேற்பட்ட மீனவர்கள் வலையை இழுப்பதால் ஒவ்வொருவருக்கும் தலா 100 முதல் 200 ரூபாய் வரையே கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments